மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04) மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட
ஈரளக்குளம் – நவுண்டலியாமாடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு – மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்76 வயதுடைய தந்தையான ஆறுமுகம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
மேலும், அவர் தனது நெல் வயலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், காட்டு யானை தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலால் விவசாயின் உடல் கடுமையாக சேதமடைந்ததுடன், அவர் தங்கியிருந்த வயல் வாடியும் முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் உடலை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

