• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவு.. முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வந்திருந்ததால் தேர்தல் முடிவு குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் முன்னிலை நிலவரங்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே இருக்கின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருந்தது.

பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் சுவெந்து அதிகாரி முன்னிலை வகித்தார். பிற்பகல் நிலவரப்படி மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றார். சுவெந்து அதிகாரி தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

காலை 11 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 186 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக தொழில்துறை மண்டலத்தில் பாஜக அதிக அளவிலான தொகுதிகளில் முன்னிலையைப் பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 105 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.



Read More

Previous Post

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

Next Post

Tamilmirror Online || வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Next Post
Tamilmirror Online || வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Tamilmirror Online || வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin