Last Updated:
அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன் நிறுவனம் தனது 34 ஆண்டுகால சேவைக்கு நேற்றுடன் மூடு விழா கண்டது.
அமெரிக்காவின் மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக அறியப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன் நிறுவனம், கொரோனா பேரிடருக்குப் பிறகு நிலையான லாபத்தை தக்கவைக்க முயற்சி செய்து வந்தது. இதற்கிடையே ஈரான் போர் வந்ததால், தற்போது அந்த நிறுவனம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திவால் நிலையில் இருந்து மீள அந்நிறுவனம் போராடி வந்த நிலையில், ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றொரு பேரிடியாக அமைந்தது. ஸ்பிரிட் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்மொழிந்தார்.
ஸ்பிரிட் ஏர்லைன் நிறுவனம்
ஆனால், அவருடைய ஆலோசகர்கள் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகியோரின் எதிர்ப்பால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில், மே 2ஆம் தேதியுடன் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டதாக ஸ்பிரிட் ஏர்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 17,000 பணியாளர்கள் வேலை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு வழித்தடங்களில் விமான சேவையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஈரான் போர் பாதிப்பு காரணமாக திவாலான முதல் ஏர்லைன் நிறுவனம் இதுவாகும்.


