சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 101.9 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 108.2 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
மேலும், மர்பான் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 103.8 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு
இந்நிலையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதன் காரணமாக வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிக்கைகளின் படி, ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி தினசரி 1.23 மில்லியன் பீப்பாய் உயர்ந்துள்ளது.
மேலும், இது 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

