நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், வங்கிக்குச் செல்லாமலேயே பணிகளை முடிப்பது இப்போது சாத்தியமாகியுள்ளது. பிஎஸ்பி அலையன்ஸ் உடன் இணைந்து, எஸ்பிஐ வங்கிச் சேவைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எளிதாக தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.


