Last Updated:
பானிபூரி சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் வண்டிக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் லேடா பஜ்டோ என்ற கிராமத்தில் வண்டிக் கடையில் விற்பனை செய்யப்பட்ட பானிபூரி உள்ளிட்டவற்றை அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பானி பூரி
இந்நிலையில் பானிபூரி சாப்பிட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி முஃபாசில் பகுதி காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பானிபூரி விற்பனையாளரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


