• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டிரம்ப் பங்கேற்ற விழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்னணி என்ன? விசாரணையில் வெளிவந்த ஷாக் ரிப்போர்ட் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டிரம்ப் பங்கேற்ற விழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்னணி என்ன? விசாரணையில் வெளிவந்த ஷாக் ரிப்போர்ட் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சி ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திடீரென அடையாளம் தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விரைவாக செயல்பட்ட அதிகாரிகள், டிரம்ப் உட்பட அங்கிருந்த அனைத்து அதிகாரிகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்தது பற்றி பேசியுள்ள அதிபர் டிரம்ப், அரங்கத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறினார். இதில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மீது குண்டு பாய்ந்ததாகவும், அவர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும், “தாக்குதல் நடத்தியவருக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர் தனி ஒருவராகச் செயல்பட்டிருக்கலாம். அவர் நோயாளியாக இருக்கலாம்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட நபர் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மிகவும் உயர்கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றி ‘மாதத்தின் சிறந்த ஆசிரியர்’ விருதினையும் பெற்றுள்ளார். மாணவர் பருவத்தில் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் ஆராய்ச்சி உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆலன் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்திற்கு ஒரு ஷாட்கன், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகளுடன் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருக்கு முன் குற்றப் பின்னணி எதுவும் இல்லை. அதிபர் டிரம்ப் இவரை ஒரு ‘தனி ஓநாய்’ என்று குறிப்பிட்டுள்ளார், அதாவது எந்தவொரு அமைப்பின் பின்னணியும் இன்றி தனிப்பட்ட முறையில் இந்தத் தாக்குதலைச் செய்தவர் என்று கருதுகிறார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு இவர் 25 டாலர் நன்கொடை அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read More

Previous Post

வெளிநாடொன்றில் ஓடிக்கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் குண்டுவெடிப்பு : பலர் பலி

Next Post

IPL 2026 : கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம்.. குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம்.. குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : கேப்டன் ருதுராஜின் பொறுப்பான ஆட்டம்.. குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin