தென்மேற்கு கொலம்பியாவில் காஜிபியோ பகுதியில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றில் நேற்று(25) குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காஜிபியோ பகுதியில் 26க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியே தாக்குதலுக்கு காரணம்
ஆயுதக் கும்பல்கள் காவல் நிலையங்கள் மற்றும் ராடர் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்த பேருந்து தாக்குதலுக்கு நாட்டின் தேடப்படும் மிக முக்கியமான குற்றவாளியான இவான் மோர்டிஸ்கோவின் கும்பல் மற்றும் ஜெய்ம் மார்டினெஸ் கும்பல் தான் காரணம் என கொலம்பிய இராணுவ தளபதி ஜெனரல் ஹியூகோ லோபஸ் தெரிவித்துள்ளார்.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

