பாதுகாப்பு குறைவாக இருந்த, மொட்டை மாடி நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் ஆலன் இருந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்வில் தன்னார்வலராகப் பங்கேற்ற ஹெலன் மாபஸ் என்பவர் அளித்துள்ள பேட்டியில், “துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர், மதுபான உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிக அறையில் இருந்துள்ளார். அங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதை பயன்படுத்திக் கொண்டு, தான் கொண்டுவந்த பையிலிருந்து ஆயுதத்தை கையில் எடுத்து, அவற்றை வைத்து துப்பாக்கியை உருவாக்கி தாக்குதல் நடத்தினார். அவர் கொண்டு வந்தது, சாதாரண துப்பாக்கி போல் இல்லை” என்று கூறியுள்ளார்.


