Last Updated:
முன்னதாக, ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வலதுசாரி விமர்சகர் ஒருவரால் எழுதி பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்தார்
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் (Mid-Term Election) நெருங்கி வரும் சூழலில், குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகள் நாட்டின் சட்ட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக, ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வலதுசாரி விமர்சகர் ஒருவரால் எழுதி பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவை ட்ரம்ப் தனது பக்கத்தில் பகிர்ந்தார். அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவருக்கும் தானாகவே குடியுரிமை வழங்கும் தற்போதைய சட்ட நடைமுறையை புலம்பெயர்ந்தோர் தவறாகப் பயன்படுத்துவதாக அந்தப் பதிவு குற்றம் சாட்டுகிறது.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் இந்திய மண்ணில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியமாகிறது. அதாவது, வெறும் பிறப்பு மட்டும் ஒருவருக்குக் குடியுரிமையை உறுதி செய்வதில்லை; பெற்றோரின் குடியுரிமை நிலையும் இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத் திருத்தம் வழங்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ (Birthright Citizenship) முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஒரு குழந்தை, அதன் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்பவர்களா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அந்த மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே தானாகவே அமெரிக்கக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெற்றோரின் குடியுரிமை பின்னணி இங்கே தடையாக இருப்பதில்லை.
இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்?


