• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் – பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் – பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 23, 2026 3:09 PM IST

மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

News18
News18

மேற்குவங்கத்தில் மக்களின் ஆதரவுடன் அடுத்த ஆட்சியை பாஜக பிடிக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், நியூஸ்18 குழுமத்தின் தலைமை ஆசிரியரும், நிர்வாக இயக்குநருமான ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது எனத் தெரிவித்த நிதின் நபின், வெறும் மூன்று இடங்களில் வென்றிருந்த பாஜக கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்றது. இதே வேகத்தில் பாஜக பயணிக்கும்போது, நிச்சயம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அராஜகம், ஊடுருவல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர். மம்தா பானர்ஜி, தனது அரசியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என ஊடுருவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டார். வாக்காளர்களாக இல்லாதவர்களுக்கு வாதாடுபவர் மம்தா பானர்ஜி என கடுமையாக விமர்சித்த நிதின் நபின், சட்டவிரோதமாக பங்களாதேஷில் இருந்து நாட்டினுள் ஊடுருவியவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு, நம் குடிமக்கள் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் நடக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் ஊழல் காரணமாக சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரமும், கமிஷன் எனும் பெயரில் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர் என குற்றம் சாட்டினார்.

வங்காளம் முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக தான் உணர்வதாக கூறிய அவர், பெண் வாக்காளர்கள் பாஜகவை அதிகளவில் ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாஜக-வின் தேர்தல் பிரச்சாரம், உண்மையான வாக்காளர்களைச் சென்றடைவதிலும், நல்லாட்சியை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிலான முடிவுகள் வரும் என நம்பிக்கை தெரிவித்த நிதின் நபின், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். கட்சியின் பிரச்சாரச் செய்தியை முன்னிலைப்படுத்திய நிதின் நபின், மோடியின் உத்தரவாதம் வாக்காளர்களிடையே தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் முழுமையாக நம்பும் ஒரு வாக்குறுதியாக அது திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

Read More

Previous Post

அன்வார் ரஃபிஸிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ‘தந்தை போன்ற’ அன்பான சந்திப்புகளை நடத்துகிறார். – Malaysiakini

Next Post

இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்? | World News (உலக செய்திகள்)

Next Post
இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்? | World News (உலக செய்திகள்)

இந்தியா, சீனாவைக் குறிவைத்து டிரம்ப் பகிர்ந்த சர்ச்சை பதிவு – அமெரிக்கக் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin