இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று (ஏப்ரல் 19) காலை வெள்ளை மாளிகையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் சிஐஏ இயக்குநரும், கூட்டுப் படைத் தலைமைத் தலைவரும் இதில் கலந்துகொண்டனர்.


