2026 மார்ச் மாதத்தில் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் பொருட்கள், மைக்கா (Mica), நிலக்கரி மற்றும் இதர தாதுக்கள், பதப்படுத்தப்பட்ட தாதுக்கள் உள்ளிட்ட கனிமங்கள், இதர தானியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைவினைத் தரைவிரிப்புகள் தவிர்த்து) ஆகியவை இருந்தன. ‘இந்தத் துறைகள் இந்தியாவின் ஏற்றுமதி விரிவாக்கத்திற்கும், துறைசார் வலிமைக்கும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன’ என்று வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.


