ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கண்டறிவதற்காகக் காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன இணைந்து “ரெயின்போ கார்மெண்ட்ஸ் டெக்னாலஜிஸ்” என்ற நிறுவனம் குறித்து கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் மூலமாக குறைந்தது 750 நபர்களிடம் ஏமாற்றி, சுமார் 920 மில்லியன் ரூபாய் வரை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சந்தேகநபர் தலைமறைவு
இந்தச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஷெர்லி ஜயவர்தன அமதோரு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் என நம்பப்படும் நிலையில், தற்போது அவர் அப்பகுதியை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சந்தேக நபர் குறித்த ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாகப் 071-8594910 அல்லது 011-2444172 என்ற தொலைபேசி எண்களின் ஊடாகக் காவல்துறைக்குத் அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

