Last Updated:
துபாய் நகை வியாபாரி ஹேமந்த் கரம்சாந்தினி, மகன் சேர்த்த லெகோ பிஃபா கோப்பை மாதிரியை அடிப்படையாக கொண்டு, 18 காரட் தங்கத்தில் 900 வைரங்கள் பதித்த கோப்பை உருவாக்கி காட்சிப்படுத்தினார்.
900 வைரக் கற்களைக் கொண்டு பிஃபா கால்பந்து உலக கோப்பை மாதிரியை துபாயைச் சேர்ந்த நகை வியாபாரி உருவாக்கி உள்ளார்.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கால்பந்து ஜுரம் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில், துபாயைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிஃபா கால்பந்து கோப்பையின் மாதிரியை தங்கத்தில் உருவாக்கி உள்ளார்.
Dubai jeweler Hemant Karamchandani has transformed a Lego World Cup trophy, assembled by his son, into a diamond-studded piece worth around $81,000 pic.twitter.com/4Uuh415NEA
— Reuters (@Reuters) June 25, 2026
18 காரட் தங்கத்தால் உருவான கோப்பையில் 900 வைரக் கற்களை பதித்து பார்க்கவே பிரமாண்டமாக பிஃபா கால்பந்து கோப்பையின் மாதிரியை நகை வியாபாரி ஹேமந்த் கரம்சாந்தினி செதுக்கியுள்ளார். துபாயில் உள்ள கண்காட்சியில் உலக கோப்பை மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனது மகனின் விருப்பத்திற்காக உருவாகியதாகவும் ஹேம்ந்த் கரம்சாந்தினி தெரிவித்துள்ளார்.


