Last Updated:
நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் பீன்ஸ் பல்வேறு வெளிச்சந்தைகளில் ஒரு கிலோவிற்கு 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசியாக விளங்குவதால் இந்த மலை மாவட்டத்தில் மலை காய்கறி பயிர்களான கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு மற்றும் பல்வேறு ஆங்கில காய்கறி வகைகள் பயிர் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பல்வேறு காய்கறி பொருட்கள் பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அவை அறுவடைக்கும் தயார் நிலையில் உள்ளது. அதில் மிக முக்கிய உணவாக மற்றும் சுவையான காய்கறி விலைப்பொருளாகவும் பீன்ஸ் சாகுபடி நடைபெறுகிறது.
விவசாய நிலங்களில் பீன்ஸ் கொடிகளில் அறுவடைக்கு தயாரான பிறகு தோட்டங்களில் பீன்ஸ் பறிக்கப்பட்டு அவை சாக்கு பைகள் மூலமாக எடுத்து வரப்பட்டு பீன்ஸ் சுத்தம் செய்யப்படுகிறது.
பொதுவான ஒரு இடத்தில் கொட்டி சுத்தமான நீரினால் பீன்ஸை சுத்தப்படுத்துகின்றனர் விவசாயிகள். அதனைத் தொடர்ந்து மூட்டைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.
பீன்ஸ் பல்வேறு வெளிச்சந்தைகளில் ஒரு கிலோவிற்கு 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் விற்பனையாவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் விவசாயிகள். சிறந்த முறையில் பீன்ஸ் விற்பனையாவதால் சிறந்த விளைச்சல் ஏற்பட்டு இருந்தால் நல்ல விலை கிடைக்கும் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
The Nilgiris,Tamil Nadu

