Last Updated:
Nibe Limited என்ற தனியார் நிறுவனம் தயாரித்த 2 ராக்கெட்டுகள் ஒடிசா மாநிலம் சந்தீப்பூர் மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டன
இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்சார்பு திட்டத்திற்கு ஊக்கமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பாக தயாரிக்கப்பட்ட டிரோன் மூலம் செலுத்தும் ஏவுகணையை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடுவானில் சோதனை செய்தது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்சார்பு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள ஆர்.சி.ஐ ஆய்வகத்தில் Unmanned Aerial Vehicle Launched Precision Guided Missile என்ற டிரோன் மூலம் செலுத்தப்படும் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் மத்திய ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
#WATCH | In a boost to India’s Atmanirbharta in Defence, Defence Research & Development Organisation (DRDO) successfully completed the final deliverable configuration development trials of Unmanned Aerial Vehicle Launched Precision Guided Missile (ULPGM)-V3 in Air-to-Ground and… pic.twitter.com/lOPJo3SXih
— ANI (@ANI) May 19, 2026
இதேபோல் Nibe Limited என்ற தனியார் நிறுவனம் தயாரித்த 2 ராக்கெட்டுகள் ஒடிசா மாநிலம் சந்தீப்பூர் மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டன. ஒடிசாவின் சந்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் 150 கி.மீ மற்றும் 300 கி.மீ தூரம் பாயும் சூர்யாஸ்த்ரா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
May 20, 2026 10:01 PM IST


