8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்! அட அடிப்படை சம்பளமே ரூ.46,660-ஆ! இது சூப்பரான விஷயமாச்சே!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருந்த விஷயத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. 8-வது ஊதியக் குழு தங்களுடைய பணிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் நவம்பர் 3-ஆம் தேதி அன்று இந்த குழு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டு.. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதியம், அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகை படி ஆகியவற்றை அரசு மறுபரிசீலனை செய்து அறிவிக்கும்.
தற்போது அரசு ஊழியர்களின் பரிந்துரைகளை எல்லாம் கருத்தில் கொண்டு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருப்பது ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது தான்.

ஒவ்வொரு முறையும் புதிய ஊதியக்குழு அமைக்கப்படும் போதெல்லாம் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு தங்களுடைய சம்பளம் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழும். இது போன்ற சமயத்தில் அத்தனை துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கும் தனித்தனியாக சம்பளத்தை கணக்கிட முடியாது.
இதற்காகவே அரசு ஒரு பெருக்கல் நம்பரை நிர்ணயம் செய்யும். இதைத்தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்று கூறுகிறோம். இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 7-வது ஊதியக்குழுவில் அரசு ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.57 என்று நிர்ணயித்தது.
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.10,000 என்று வைத்துக் கொள்வோம். புதிய சம்பளத்தை கணக்கிட.. பழைய சம்பளத்தையும் 2.57-ஆல் பெருக்கினால் 25,700 வரும். அப்படியானால் ஒருவருடைய அடிப்படை ஊதியம் ரூ.25,700-ஆக மாறும்.
மற்றபடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகள் எல்லாம் இந்த அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. எனவே எப்போதெல்லாம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் மற்ற படிகளும் அதிகரித்து மொத்த சம்பளமும் அதிகரிக்கும்.
தற்போது BPMS மற்றும் NC JCM போன்ற தொழிற்சங்கங்கள் இந்த ஃபிட்மென் ஃபேக்டரை 3.5-க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இது குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இறுதி அறிக்கை 2027-ஆம் ஆண்டின் மே முதல் ஜூன் மாதங்களுக்கு மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை 8-வது ஊதிய குழுவிலும் ஃபிட்மென் ஃபேக்டர் 2.57-ஆக அறிவிக்கப்பட்டால் MDS லெவல் 1 மற்றும் குரூப் டி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும். தற்போது வரை இவர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.18,000-ஆக உள்ளது. 8-வது ஊதியக் குழுவிலும் 2.57 என்ற ஃபிட்மன் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டால் இவர்களுடைய சம்பளம் ரூ.46,660-ஆக அதிகரிக்கும். அதேபோல, லெவல் 7 ஆசிரியர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ. 44,900-லிருந்து ரூ. 1,15,400 ஆக அதிகரிக்கும்.
சில வல்லுனர்களின் கூற்றுப்படி இந்த முறை ஃபிட்மென் ஃபேக்டர் 1.92 முதல் 2.86 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் ஃபிட்மென் ஃபேக்டர் அப்படியே அமல்படுத்தப்பட்டால் ஒரு சில ஊழியர்களின் சம்பளம் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
