ஊடகவியலாளரும் கல்வியாளருமான ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாக
சுவிஸ் தமிழ் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
அவரின் மறைவு தொடர்பில் குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கள் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், “யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான சபேஸ்வரன் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், நல்ல பண்புகளை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுடன், ஊடகத் துறையிலும் உண்மை, நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செய்தியுலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
அவரது கல்விச் சேவையும், எழுத்துப் பணியும், சமூக அக்கறையும் பலருக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, கல்வித் துறைக்கும், ஊடக உலகிற்கும், அவரை அறிந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறைவன் அன்னாரின் ஆன்மாவிற்கு சாந்தியையும், பிரிவுத் துயரில் வாடும் அனைவருக்கும் இந்த இழப்பைத் தாங்கும் மனவலிமையையும் அருள்வானாக.
ஆழ்ந்த இரங்கலுடன் சுவிஸ் தமிழ் ஊடக மையம்.” எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

