மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலில் 7,995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா அடங்கிய மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் பிரிவு சிவசேனா உள்ளிட்டவை அடங்கிய மகாவிகாஸ் அகாதி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 7,995 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்ததால் 10,905 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களை திரும்பப் பெறுவதற்கு நவம்பர் 4ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5,543 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3,239 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read |
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!
மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக 146 இடங்களில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 80 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அதேநேரம், மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 103 இடங்களிலும், சிவசேனா (உத்தவ்) 87 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 82 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதன்மூலம் 272 தொகுதிகளிலும் இந்த 3 பெரிய கட்சிகள் போட்டியிடும் வேளையில், மீதமுள்ள 16 தொகுதிகள் யாருக்கு என்பதை இறுதி செய்வதில் கடைசி வரை பரபரப்பு நிலவியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
