Last Updated:
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு 6 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு 6 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.
பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள் நைஸ் நகரில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது ஸ்டார்ட் அப், வென்ச்சர் கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அதைத் தொடர்ந்து 14ஆம் தேதி ஸ்லோவாக்கியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிக்கோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஸ்லோவாக்கியா செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் 16ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் வரும் பிரதமர் மோடி ஈவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பிரான்ஸ் தலைமையேற்று நடத்தும் 52வது ஜி7 உச்சி மாநாட்டில் 7வது முறையாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பின்னர் 18ஆம் தேதி பாரீஸ் செல்லும் பிரதமர் மோடி, VivaTech மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதனிடையே பாரீஸில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் பிரதமர் மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புகிறார்.
6 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி… முதலீடுகளை ஈர்க்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்பு!


