வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 540 மாவட்டங்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதில் 98 மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கூறியதாவது: பிப்ரவரி மாதம் கடும் கோடை காலம் காரணமாக, மத்திய, மேற்கு மற்றும் தீபகற்ப இந்தியாவில் தண்ணீர் ஆவியானது. தேவையும் அதிகரித்தது. இதனால், பயிர் பாதிப்பும், தண்ணீர் பற்றாக்குறையும் உருவாகி உள்ளது. பல்ஹர், சங்லி, புனே, ராஜ்கோட், ஜூனாகத், துவாரகா, மைசூரு, எர்ணாகுளம், திரிச்சூர், பெல்காம், ராய்காட், ரத்னகிரி, திருவனந்தபுரம், மதுரை மற்றும் வேலூர் உள்ளிட்ட 98 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் 442 மாவட்டங்கள் வறண்டு வருகிறது. கோடை துவங்கும் முன்னரே வறட்சி சூழ்நிலை ஏற்படுவது கவலை அளிக்கிறது. வரும் நாட்களில், மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்பதால், நீர் ஆவியாதலும் அதிகமாக இருக்கும்.. பெங்களூரின் தெற்கு பகுதி, கேரளாவின் மேற்கு மாவட்டங்கள், மஹாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் தமிழகம் ஆகியவை அதிக வெப்பநிலையால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement