பெங்களூரு : கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் 34 பேருக்கு, கடந்த மாதம் அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி கிடைத்தது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்கு உழைத்தவர்கள் என, மேலும் 44 பேருக்கு வாரிய தலைவர் பதவி வழங்க, முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளார்.
யார், யாருக்கு பதவி என்பது குறித்து, இன்று பட்டியல் வெளியாகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாரிய தலைவர் பதவி கொடுத்தால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்காக தீவிரமாக உழைப்பர் என்ற நோக்கில், பதவி வழங்கப்படுகிறது.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement