• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

4 பந்தில் 4 சிக்சர் அடித்த விஜய்.. 4 மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு! | Vijay TVK: Announces Multi-District Infra Push: ₹20,800 Cr Thermal Plant, ₹400 Cr Coimbatore FinTech Hub, Kanchipuram Semiconductor Park

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
4 பந்தில் 4 சிக்சர் அடித்த விஜய்.. 4 மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு! | Vijay TVK: Announces Multi-District Infra Push: ₹20,800 Cr Thermal Plant, ₹400 Cr Coimbatore FinTech Hub, Kanchipuram Semiconductor Park
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


4 பந்தில் 4 சிக்சர் அடித்த விஜய்.. 4 மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

விஜய் தலைமையிலான அரசு முந்தைய அரசு அறிவித்த, செயல்படுத்திய, திட்டமிட்ட பல்வேறு திட்டங்களை மறு ஆய்வு, திட்ட மேம்பாடு என பல்வேறு காரணங்களை கூறி அடுத்தடுத்து ரத்து செய்தும், நிலுவையில் வைத்து வரும் வேளையில் இன்று சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி என 4 மாவட்டத்தில் 4 முக்கிய திட்டங்களை அறிவித்தார் விஜய்.

இதில் முக்கியமாக மின்சார பற்றாக்குறை பிரச்சனையை தீர்க்கவும், வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் ஐடி துறைக்கு புதிய பலத்தை கொடுக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

4 பந்தில் 4 சிக்சர் அடித்த விஜய்.. 4 மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மதுரமங்கலத்தில் புதிதாக செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பார்க் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 175 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதை சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பார்கில் உலகத் தரம் வாய்ந்த R&D அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளும் உருவாக்கப்பட உள்ளது.

இந்தியாவுக்கு வரும் செமிகண்டக்டர் திட்டம் பெருமளவில் வட இந்தியாவுக்கு வரும் வேளையில், இத்திட்டத்தின் வாயிலாக Semiconductor மற்றும் Electronics துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு-க்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த சிறப்பு தொழிற்கூடம் மூலம் சுமார் 2000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக நாடுகளின் முன்னணி செமிகண்டக்டர் ஜிசிசி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டு வரும் வேளையில் இந்த பார்க் மிகவும் முக்கியமானதாகவம், உதவிகரமாகவும் இருக்கும்.

இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக அறசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

சென்னைக்கு அடுத்தாக வேகமாக வளரும் டெக் நகரமாக கோயம்புத்தூர் திகழும் வேளையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைய உள்ள புதிய பின்டெக் சிட்டி போலவே கோயம்புத்தூரிலும் TIDCO மூலம் FinTech Hub அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டம் மூலம் கோயம்புத்தூரை நிதி தொழில்நுட்பத் துறையின் (FinTech) முக்கிய மையமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த பின்டெக் ஹப்பில் உலகத் தரத்திலான வசதிகள் மற்றும் அலுவலக இடங்கள் உருவாக்கப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் நவீன ஆய்வகங்கள் இந்த FinTech Hub-ல் இடம்பெறும். உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையிலும் இந்த மையம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியில் தற்போது சிப்காட் வளர்ச்சி காரணமாக பல துறை சார்ந்த நிறுவனங்கள் வர துவங்கியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி பொருட்களின் போக்குவரத்தை மேம்படுத்த Multi Model Logistics Hub அமைக்கப்படும் திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டமும் TIDCO மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இந்த மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் ஹப் பல்வேறு போக்குவரத்து மற்றும் சரக்கு இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் தூத்துக்குடியில் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 புதியஅனல் மின் நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station உருவாக்கப்பட உள்ளது.

இந்த மெகா திட்டத்திற்காக 20,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி ஏற்கனவே தொழில்துறை மற்றும் துறைமுக நடவடிக்கைகளில் முக்கியமான பகுதியாக உள்ள நிலையில், அடுத்தடுத்து பல பெரிய முதலீடுகளில் பெரிய தொழிற்கூடங்கள் அமைந்து வரும் வேளையில் இப்புதிய அனல் மின் நிலையத்தின் உற்பத்தி வளர்ந்து வரும் தொழில்துறைக்கு ஆதரவாக இருக்கும்.

Share This Article

English summary

Vijay TVK: Announces Multi-District Infra Push: ₹20,800 Cr Thermal Plant, ₹400 Cr Coimbatore FinTech Hub, Kanchipuram Semiconductor Park

Vijay TVK: Announces Multi-District Infra Push: ₹20,800 Cr Thermal Plant, ₹400 Cr Coimbatore FinTech Hub, Kanchipuram Semiconductor Park — 4 பந்தில் 4 சிக்சர் அடித்த விஜய்.. 4 மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

Story first published: Monday, August 31, 2026, 13:03 [IST]

Read More

Previous Post

மன்னார்குடியில் வெறும் மண்ணு மட்டும்தான் தெரியுது.. இப்படி ஆக்கிட்டிங்களே! டிஆர்பி ராஜா வேதனை | Delta districts face drought as Karnataka fails to release adequate Cauvery water, says TRB Raja

Next Post

சுற்றிலும் பேரழிவு.. அசராமல் நின்ற ஒற்றை வீடு.. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பியது எப்படி | Nepal Flood: How Did the Green House Survive? Experts solved the Mystery, science is the reason

Next Post
சுற்றிலும் பேரழிவு.. அசராமல் நின்ற ஒற்றை வீடு.. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பியது எப்படி | Nepal Flood: How Did the Green House Survive? Experts solved the Mystery, science is the reason

சுற்றிலும் பேரழிவு.. அசராமல் நின்ற ஒற்றை வீடு.. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பியது எப்படி | Nepal Flood: How Did the Green House Survive? Experts solved the Mystery, science is the reason

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin