• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா | 35 Years Ago This July: How India Pledged Gold to Avert Bankruptcy in the 1991 Crisis

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா | 35 Years Ago This July: How India Pledged Gold to Avert Bankruptcy in the 1991 Crisis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா

ஒரு குடும்பத்தில் திடீரென தந்தைக்கு வரும் சம்பளம் நின்றுவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள்.. அடுத்து என்ன நடக்கும்.. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வைத்து சில நாட்கள் கடத்தலாம். அடுத்தகட்டமாக வங்கி கணக்கில் இருக்கும் பணம் குறையும், ஈஎம்ஐ கழுத்தை நெருக்கும், மளிகை சாமான், மின்சார கட்டணம், பள்ளிக் கட்டணம் அடுத்தடுத்து பிரச்சனைகள் வர துவங்கும்.

அடுத்தக்கட்டமாக சில நாட்கள் கடன் வாங்கி சமாளிப்போம், இதையும் தொடர்ந்து செய்ய முடியாது. அடுத்தாக வீட்டில் இருக்கும் தங்கம் தான் இறுதி வழியாக இருக்கும்.

35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா

இதே விஷயம் தான் இந்தியாவுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜூலை மாதம் நடந்தது. 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் திவாலாக கூடிய நிலையில் மத்திய அரசு வேறு வழியே இல்லாமல் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி நாட்டை திவாலாக காப்பாற்றியது தெரியுமா..?

1991ல் என்ன நடந்தது..?

இந்தியா, வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்த காலம் தான் 1989-91 வரையிலான காலக்கட்டம். இப்போது இந்தியா கச்சா எண்ணெய், மருந்த பொருட்ரகள், இயந்திரங்கள், விவசாய உரங்கள் வரையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய டாலரை மட்டுமே பயன்படுத்தி வந்தது.

ஆனால் பல்வேறு காரணத்தால் இந்தியாவின் அன்னிய செலாவணி குறைந்து, சில வாரங்கள் இறக்குமதிக்கு மட்டுமே போதுமான டாலர் இருப்பு இருந்தது. இதனால் அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியா திவாலாகி விடும் என்ற நிலை உருவானது.

ஏன் இந்த நிலை உருவானது?

1980களில் இந்தியா தனது வருமானத்தை காட்டிலும் அதிகளவில் செலவு செய்து வந்தது, இது தொடர்ந்ததால் நாட்டின் நிதி நிலை மோசமானது. இதே காலக்கட்டத்தில் தான் வளைகுடா நாடுகள் மத்தியில் Gulf War உருவாகி கச்சா எண்ணெய் விலை கண்ணாபின்னாவென உயர்ந்தது.

இதுமட்டுமா உள்நாட்டில் ஆட்சி மாற்றம் தொடர்ந்து நடந்து வந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றியது.

என்ஆர்ஐகளும் தங்களுடைய டாலர் முதலீடுகளையும், டாலர் வைப்புகளை வெளியேற துவங்கியதால் அன்னிய செலாவணி தொடர்ந்து குறைந்து வந்தது.

ஒரே தீர்வு தங்கம்

இப்படி இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வந்த வேளையில், இறக்குமதிக்கும், பட்ஜெட்டுக்கும் போதுமான நிதியை திரட்ட 1991ஆம் ஆண்டு குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்த சந்திரசேகர் மற்றும் அப்போதை நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா கருவூலத்தில் இருக்கும் தங்கத்தை பணமாகக் முடிவு செய்தனர்.

இதில் முதல் கட்டமாக சுமார் 20 டன் தங்கத்தை யூனியன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து வங்கியில் அடமானமாக வைத்து 200-240 மில்லியன் டாலர் தொகையை வாங்கினர். இதற்காக மும்பையில் இருந்து 20 டன் தங்கத்தை விமானத்தில் மிகவும் ரகசியமாக பலத்த பாதுகாப்புடன் சுவிஸ்-க்கு கொண்டு செல்லப்பட்டு அடமானம் வைக்கப்பட்டது.

அடுத்தாக இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தது, 1991 ஆண்டின் பிற்பகுதியில் பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இப்போது நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். இவர்களின் தலைமையில் 2வது கட்டமாக 46.91 டன் தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவற்றில் சுமார் 400-405 மில்லியன் டாலருக்கு அடமானம் வைக்கப்பட்டு நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தப்பட்டது.

முதல் முறை தங்கத்தை அடமானமாக வைத்து கடன் வாங்குவது குறித்து அறிவிக்கப்படவில்லை, அதை அறிவித்தால் முதலீட்டாளர்கள் இந்தியா மீதான நம்பிக்கையை மொத்தமாக இழந்து முதலீட்டை வெளியேற்றி, நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் உருவாகும் என கருதப்பட்டதால் ரகசியம் காக்கப்பட்டது. பின்னாளில் இது தெரிய வந்ததும் மக்கள் மத்தியில் அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை.

மாற்றம்..

இந்த ஒரு விஷயத்தால் இந்தியா திவால் ஆகாமல் தடுக்கர்பட்டது, இறக்குமதி எவ்விதமான தடையும் இல்லாமல் தொடர்ந்து நடந்தது, பொருளாதாரம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.

பொருளாதார சீர்திருத்தம்..

பிவி நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் உலகமயமாக்கல்-ஐ கையில் எடுத்து. இந்த பயணத்தில் மிக முக்கியமாக இந்தியாவில் இருக்கும் தொழிற்துறைகளில் அரசின் பிடி தளர்த்தப்பட்டது, லைசென்ஸ் ராஜ் முறை ஒழிக்கப்பட்டது, வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியா கதவுகளை திறந்தது, இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டது, தனியார் நிறுவனங்களையும், தனியார் முதலீடுகளுக்கும் பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் தான் இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

இன்று இந்தியாவின் தங்க இருப்பு..

ஆர்பிஐ இன்று சுமார் 880 டன் தங்கத்தை வைத்துள்ளது, 676 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணி வைத்துள்ளது. இதைவிட முக்கியமாக வெளிநாட்டில் இருக்கும் இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் அனைத்தையும் தாய் நாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துள்ளது. இதனால் 1991 போல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தாலும் இந்தியா தற்போது FCNR திட்டத்தை பயன்படுத்துவது போல் தங்கத்தை மீண்டும் பயன்படுத்தும்.

இந்தியாவையே காப்பாற்றிய தங்கம் நம் வீட்டை காப்பாற்றாதா என்ன..? சிறுக சிறுக சேமித்தாலும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் போது தொடர்ந்து தங்கத்தை வாங்கி நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் சேமியுங்கள்.

Share This Article

English summary

35 Years Ago This July: How India Pledged Gold to Avert Bankruptcy in the 1991 Crisis

35 Years Ago This July: How India Pledged Gold to Avert Bankruptcy in the 1991 Crisis — 35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா

Story first published: Friday, July 31, 2026, 19:17 [IST]

Read More

Previous Post

திருமணத்தை மீறிய உறவு.. கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி.. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காவல்துறையினர் 3 பேரை கைது செய்து, போதைப்பொருட்கள் மற்றும் புகை குண்டுகளை பறிமுதல் செய்தனர். – Malaysiakini

Next Post

காவல்துறையினர் 3 பேரை கைது செய்து, போதைப்பொருட்கள் மற்றும் புகை குண்டுகளை பறிமுதல் செய்தனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin