Last Updated:
Volvo Cars நிறுவனம் செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 3,000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் கூட தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளதால் ஏற்பட்டுவரும் செலவினங்களை மிச்சப்படுத்த தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. அதேபோல AI-ன் அறிமுகம் மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் மெட்டா போன்ற பெரிய ஐடி நிறுவனங்களைக் கூட, தங்கள் பணியாளர்களை மறுமதிப்பீடு செய்து அளவை விட தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கத் தூண்டியுள்ளது.
நிலைமை இப்படி இருக்க கார் தயாரிப்பு நிறுவனங்களும் பணியாளர்களை நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு விலக்கல்ல என்பது போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் Volvo Cars நிறுவனம் செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 3,000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஸ்வீடிஷ் வாகன உற்பத்தி நிறுவனமான Volvo Cars ஆனது
வர்த்தக நிச்சயமற்ற தன்மை, மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறைந்து வருதல் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்ட பல சிக்கல்களை ஒரே நேரத்தில் வோல்வோ கார்ஸ் நிறுவனம் கையாண்டு வருகிறது. நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் மீண்டும் Volvo Cars-ஐ வழிநடத்தத் திரும்பிய சில வாரங்களுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 18 பில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்ஸ் (சுமார் $1.9 பில்லியன்) செலவுகளைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார்.
நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கையில் சுமார் 40%-ஆக இருக்கும் ஒயிட் காலர் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பது நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்காக எடுக்கப்படும் முதன்மை விஷயமாக இருக்கும். உலகளவில் இந்த நிறுவனம் அமெரிக்காவில் 3,000-க்கும் மேற்பட்டவர்களையும், ஆசியாவில் 10,000 பேரையும், ஐரோப்பாவில் 29,000 பேரையும் வேலைக்கு வைத்துள்ளது.
இந்த நிலையில் தகவல் தொடர்பு, மனிதவளம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்று சாமுவேல்சன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வேலை நீக்கங்கள் ஸ்வீடனின் கோதன்பர்க் சார்ந்தே இருக்கும் என்று நிறுவனத்தின் புதிய நிதித் தலைவர் ஃபிரெட்ரிக் ஹான்சன் தெரிவித்தார். முதற்கட்டமாக வோல்வோ கார்ஸின் அலுவலக ஊழியர்களில் கிட்டத்தட்ட 15% பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், மேலும் மறுசீரமைப்பு செலவுகள் மொத்தம் 1.5 பில்லியன் கிரவுன்ஸ் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த மாற்றம் அதன் கட்டமைப்பை மிகவும் பயனுள்ளதாக மாற்ற உதவும்.
தற்போது வோல்வோவின் முக்கிய கவலைகளில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினைகள் ஒன்றாகும். அமெரிக்காவின் புதிய வரிகளால், மற்ற ஐரோப்பிய பிராண்டுகளை விட இந்நிறுவனம் அதிகம் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில், அதன் பெரும்பாலான வாகனங்கள் சீனா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படுகின்றன. ஒருவேளை வரிகள் அதிகரித்தால், அமெரிக்காவில் அதன் நியாயமான விலையில் விற்கப்பட்டு வரும் சில வாகனங்களை விற்க முடியாமல் போகலாம். நிறுவனத்தின் பணிநீக்க முடிவுகள் பயனுள்ளதாகவே இருக்கக்கூடும் என்று ஹேண்டல்ஸ்பேங்கனின் ஆய்வாளர் ஹம்பஸ் எங்கெல்லாவ் கூறுகிறார்.
June 05, 2025 10:04 PM IST


