Last Updated:
ஜஸ்பிரீத் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடுவார், மீதம் உள்ள 2 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டது.
இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜஸ்பிரீத் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என்றும், மீதம் உள்ள 2 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் எந்த 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதை இந்த தொடரின் இடையில், இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்து, அணி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துரூவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ்
June 05, 2025 9:41 PM IST


