நிறுவனத்தின் சிஎஃப்ஓ கேமரூன் ரெசாய் கூறுகையில், “யோசனை என்னவென்றால், மதியம் மூன்று பேர் வெளியே சென்று ஒன்றாக ஹேங்கவுட் செய்கிறார்கள். அவர்கள் பொருத்தமான அல்லது வேலை தொடர்பான ஒன்றைப் பற்றி பேசுவார்கள். இறுதியில், அது எங்களுக்கு பயனளிக்கும்’’ என்று கூறியுள்ளார்.
நிறுவனத்தின் சிஇஓ ஃபிலிப் கலிஸ்சான் கூறுகையில், “இது போன்ற ஹேங்அவுட்களின் மூலம் ஊழியர்கள் பணி தொடர்பாக உரையாடுவது அதிகரிக்கும். இறுதியில், 100 பில்லியன் மதிப்புள்ள போட்டியாளர் நிறுவனங்களுக்கு எதிராக துறையில் போட்டியிட இது எங்களுக்கு பயனளிக்கிறது.
திட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் அவர்களது புகைப்படத்தை 3-3-3 ஸ்லாக் சேனலில் பகிர்ந்து கொள்ள வேண்டும். பட்ஜட்டை தாண்டி, ஊழியர்களிடையே உற்சாகத்தை உருவாக்குவதுதான் திட்டத்தின் வெற்றி” என்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் தற்போது கவனம் பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பணி கலாச்சாரம் இங்கு பொருந்துமா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!