கோலாலம்பூர்: சமீபத்தில் பத்து கேவ்ஸ் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது மூன்று வயது மகனைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணை காவல்துறை தேடி வருகிறது. அதே வீட்டில் வசிக்கும் குழந்தையின் பாட்டி நேற்று புகார் அளித்ததாக கோம்பாக் காவல் நிலையத் தலைவர் நூர் அரிஃபின் நசீர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், மார்ச் மாத தொடக்கத்தில் இரவு சுமார் 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, குழந்தை அழுவதைக் கேட்ட புகாரளித்தவர், தனது தாய் குழந்தையைத் துன்புறுத்துவதாகச் சந்தேகித்துள்ளார். சந்தேகத்திற்குரியவர் உள்ளூர் பெண் மற்றும் குழந்தையின் உயிரியல் தாய் ஆவார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை, மேலும் இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுளதோடு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது, மேலும் இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அமிருல் அஷ்யராஃப் அபு ஹசனை 019-3491233 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்ட காவல் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




