22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றும் போது அரசாங்கத்திற்குள் சிறிய பிளவு ஏற்பட்டதாக சபை முதல்வரும் ஊடக அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிளவு மிகப்பெரியது என எதிர்கட்சிகள் அரசியல் இலாபநோக்க கருத்தை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சி இந்த நிலைமையை அரசியல் இலாபத்துக்காக மிகைப்படுத்தி சமூகத்தில் பிரசாரம் செய்ய முயன்றது.
அச்சத்தை ஏற்படுத்தும் செயல்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாகக் காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சித்தது.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்பட்டன.
எனினும், அரசாங்கம் ஒருமித்த நிலையில் செயற்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஏற்பட்ட சிறியளவிலான கருத்து வேறுபாடு தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான கணக்கீடு இருந்தது.
மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பிலும் எதிர்க்கட்சி தவறான தகவல்களைப் பரப்பியது.
அத்துடன், அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனுடன் தாக்கம் தொடர்பான அறிக்கை இடம்பெறவில்லை என சில எதிர்க்கட்சி சட்டத்தரணிகள் முன்வைத்த குற்றச்சாட்டும் தவறானது” என பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

