• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

21 வயதில் வேலை.. 23 வயதில் ஓய்வு.. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர்!

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
21 வயதில் வேலை.. 23 வயதில் ஓய்வு.. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 21, 2025 9:13 AM IST

ஓய்வு பெறுவதற்கு முன்பு பாவெல் இரண்டு ஆண்டுகள் ரஷ்ய வெளியுறவுத் துறைக்காக கடுமையாக பணியாற்றி இருக்கிறார்.

News18News18
News18

ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் ஸ்டெப்செங்கோ என்கிற இளைஞர் தனது 23 வயதில் ஓய்வை அறிவித்து, வாழ்நாள் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளார்.

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை 20 வயதிற்கு மேல் தான் தொடங்குகின்றனர். ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் என்கிற இளைஞர் தனது 23 வயதில், பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட அனைத்து விதமான ஓய்வூதிய சலுகைகளும் வழங்கப்படுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வேலை செய்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது 23 வயதில் ஓய்வு பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்ததன் மூலம் சர்வதேச சாதனை பதிவு நிறுவனத்தில் இடம்பிடித்துள்ளார். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் வயதில், இளைஞர் ஒருவர் ஓய்வை அறிவித்துள்ளது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அத்துடன், அவருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கிறது. இதற்கு முன்பு யாரும் இவ்வளவு இளம் வயதில் ஓய்வு பெறவில்லை என்பதால், அவரது பெயர் ரஷ்யாவின் தேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

21 வயதில் பணி.. 23 வயதில் ஓய்வு

ஆடிட் சென்ட்ரலின் அறிக்கைப் படி, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்த பாவெல் ஸ்டெப்செங்கோ 2 வருட வேலைக்குப் பிறகு தனது 23 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வூதியம் என்பது பொதுவாக முதுமையுடன் தொடர்புடையது. இன்று பலரும் சீக்கிரமாக ஓய்வு பெற விரும்பினாலும், 40 வயதிற்கு முந்தைய ஓய்வு என்பதை அரிதாகவே பார்க்க முடிகிறது. இதுபோன்ற தொன்றுதொட்ட வழக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து, பாவெல் தனது 23 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

பாவெல் தனது 16 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு, 21 வயதில் ரஷ்ய வெளியுறவுத் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. இதையடுத்து, 2 வருட வேலைக்குப் பிறகு தற்போது தனது ஓய்வையும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு பாவெல் இரண்டு ஆண்டுகள் ரஷ்ய வெளியுறவுத் துறைக்காக கடுமையாக பணியாற்றி இருக்கிறார்.

இப்போது, ​​ஓய்வூதியம் மற்றும் தொடர்புடைய அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கின்றன. நவம்பர் 2023இல் ஓய்வு பெற விண்ணப்பித்திருந்த பாவெலின் கோரிக்கை சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சமூக வலைதளங்களில் டிரெண்டானார். மேலும், இந்த அசாதாரணமான வழக்கு ரஷ்யாவின் சர்வதேச பதிவு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பாவெலை தலைப்புச் செய்திகளிலும் இடம்பெற செய்துள்ளது.

First Published :

March 21, 2025 9:13 AM IST

Read More

Previous Post

இந்தியாவில் ஸ்டீல் விலை உயருமா…? ஸ்டீல் பொருட்களுக்கு 12% தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு திட்டம்…!

Next Post

சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 12 வயது சிறுமிகள் கைது – Malaysiakini

Next Post
சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 12 வயது சிறுமிகள் கைது – Malaysiakini

சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 12 வயது சிறுமிகள் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin