Last Updated:
இந்தியா தவிர சவுதி அரேபியா, சிலி போன்ற நாடுகளும், குறிப்பாக சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு எஃகு இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உள்நாட்டு எஃகுத் தொழில்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கிட்டத்தட்ட அனைத்து வகையான ஸ்டீல் இறக்குமதிகள் மீதும் தற்காலிகமாக 200 நாட்களுக்கு 12% வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இருக்கும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநரகம் (DGTR), உள்நாட்டுத் தொழிலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்பு மற்றும் அச்சுறுத்தலைப் போக்க 12% தற்காலிக பாதுகாப்பு வரி விதிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அரசு கருதுவதாக தனது சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் இறுதிப் பரிந்துரையை உருவாக்குவதில் அமைச்சகத்தற்கு உதவ கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
30 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்குமாறும், அதன் பிறகு இறுதி முடிவை எடுக்கும் முன் தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்றும் DGTR-ன் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, “தற்காலிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும், அதைச் சரிசெய்வது கடினமாக இருக்கும்” என்று அரசு கூறியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க எஃகு இறக்குமதிகள் மீது பாதுகாப்பு வரிகளை விதிப்பதற்கான வலுவான உந்துதலை முதற்கட்ட அறிக்கை பரிந்துரைக்கிறது.
ஒருவேளை தற்காலிகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டால், அந்த நடவடிக்கையானது சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஸ்டீல் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக அரசிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரிய JSW ஸ்டீல் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் போன்ற உள்நாட்டு இந்திய ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
இந்தியா தவிர சவுதி அரேபியா, சிலி போன்ற நாடுகளும், குறிப்பாக சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு எஃகு இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி உத்திகள் நீண்டகால வரி மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில், பாதுகாப்பு வரி என்று அழைக்கப்படும் இந்த இறக்குமதி வரி அமலுக்கு வரக்கூடிய சூழல் உள்ளது. உள்நாட்டுத் எஃகு உற்பத்தித் துறை/தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்பாராத இறக்குமதி அதிகமுள்ள காரணத்தால் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Investing in Gold | எஸ்பிஐ கோல்டு ஃபண்டு vs ஆபரணத் தங்கம்: 1 வருடத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் அதிக வருமானம் தருவது எது…?
உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நாடான இந்தியா, வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து, எஃகு உபரி விநியோகத்தைச் சமாளிக்க வேண்டிய சில வேகமாக வளர்ந்து வரும் ஆசிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. அதே நேரம் சீன எஃகு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியை கணிசமாக நம்பியுள்ளனர். சீனாவில் இருக்கும் எஃகு உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துள்ள போதிலும், அதன் உள்நாட்டுத் தேவைக்கானதைவிட அதிக அளவு இன்னும் எஃகு உற்பத்தி அங்கு தொடர்வதன் விளைவாக, ஏற்றுமதி அங்கு இன்னும் அதிகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Gold Loan New Rules | தங்க நகைக்கடன்..! ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் யாருக்கு லாபம்?
இதனிடையே பாதுகாப்பு வரி விதிப்பு குறித்த இறுதி முடிவு, இறுதியில் நடத்தப்படும் விசாரணைகள், பங்குதாரர்களின் பதில்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு இணங்குவது ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருவேளை வரி விதிக்கப்பட்டால், அந்த முடிவு உள்நாட்டு மற்றும் உலகளாவிய வர்த்தக மன்றங்களில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
March 21, 2025 5:32 PM IST
இந்தியாவில் ஸ்டீல் விலை உயருமா…? ஸ்டீல் பொருட்களுக்கு 12% தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு திட்டம்…!


