Last Updated:
2026 FIFA World Cup | மற்றொரு ஆட்டத்தில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ, ஸ்காட்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அமெரிக்கா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் போட்டி சியாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், தவறுதலாக சேம் சைட் கோல் அடித்ததால், அமெரிக்கா அணி தனது முதல் கோல் கணக்கை தொடங்கியது.
முதல் பாதி முடியும் தருவாயில், 43 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ஒரு கோல் அடித்து, அணியின் முன்னிலையை 2-க்கு பூஜ்ஜியம் என உயர்த்தினார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், வெற்றியை உறுதிசெய்த அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள மொராக்கோ, ஸ்காட்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே மொராக்கோ வீரர் பிராஹிம் கோல் அடித்து அசத்தினார். இறுதியில், 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது.


