• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2016-இல் வாங்கிய 5 கிராம் மோதிரத்தின் மதிப்பு.. 2026-இல் என்னவாக இருக்கும்? என்னது 3 மடங்கு லாபமா? | How a 5-gram gold ring bought in 2016 tripled in 2026

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2016-இல் வாங்கிய 5 கிராம் மோதிரத்தின் மதிப்பு.. 2026-இல் என்னவாக இருக்கும்? என்னது 3 மடங்கு லாபமா? | How a 5-gram gold ring bought in 2016 tripled in 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2016-இல் வாங்கிய 5 கிராம் மோதிரத்தின் மதிப்பு.. 2026-இல் என்னவாக இருக்கும்? என்னது 3 மடங்கு லாபமா?

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. கோல்டு காயின்கள், கோல்டு பார்கள் போன்றவற்றை 10 வருடத்திற்கு முன்பு வாங்கி வைத்திருந்தால் இன்று அதன் மதிப்பே தனி. ஒரு சில முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட்டிருந்தால் கூட அவ்வளவு லாபம் கிடைத்திருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் தங்கம் சூப்பரான லாபத்தை வழங்கி இருக்கிறது. இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் உங்களுக்கு விஷயம் புரியவரும். 2016-ஆம் ஆண்டில் ஒருவர் 5 கிராம் தங்க மோதிரம் வாங்கியிருந்தால் அதன் மதிப்பு 2026-ஆம் ஆண்டில் என்னவாக இருந்திருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

2016-ஆம் ஆண்டில் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 2600 முதல் 3000 ரூபாயாக இருந்தது. அப்போது நீங்கள் 5 கிராம் கோல்டு காயின் வாங்கி இருந்தால் அன்றைய விலைக்கு ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை செலுத்தி இருப்பீர்கள். இதோடு மேக்கிங் சார்ஜஸ் மற்றும் வரி ஆகியவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அப்போது 5 கிராம் மோதிரம் வாங்க ரூ.16,000 முதல் ரூ.17,000 வரை செலவாகி இருக்கும்.

அப்படியே 2026-ஆம் ஆண்டிற்கு வருவோம். தற்போது 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.13,370-ஆக இருக்கிறது. அதே 5 கிராம் தங்க மோதிரம் வாங்குவதற்கு தற்போது ரூ.66,880 செலவு செய்ய வேண்டும். இது வெறும் தங்கத்திற்கான விலை தான். அதோடு மேக்கிங் சார்ஜஸ் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பார்த்தால் ரூ.76,000 முதல் ரூ.77,500 வரை செலவாகும். அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செய்த சிறு முதலீடு கிட்டத்தட்ட 3 மடங்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.

2016-இல் வாங்கிய 5 கிராம் மோதிரத்தின் மதிப்பு.. 2026-இல் என்னவாக இருக்கும்? என்னது 3 மடங்கு லாபமா?

பழைய தங்கத்தை விற்பனை செய்யும் போது கடைக்காரர்கள் புதிய தங்கத்தை விற்பனை செய்யும் விலைக்கு வாங்க மாட்டார்கள். உங்கள் நகையில் கற்கள், மணிகள் அல்லது எனாமல் வேலைபாடுகள் இருந்தால் அதை எல்லாம் கழித்துக் கொள்வார்கள். அதோடு உருக்குவதற்கான கூலியையும் சேர்த்து கழித்துவிட்டு.. பின்னர் நகையின் மதிப்பை போடுவார்கள். எனவே நீங்கள் வாங்கிய போது இருந்த விலையை விட ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கழித்துக் கொண்டு உங்களுக்கு பணம் கிடைக்கும். அப்படியானால் நீங்கள் 10 வருடத்திற்கு முன்பு வாங்கிய 5 கிராம் தங்க மோதிரத்திற்கு ரூ.68,000 முதல் ரூ.70,000 வரை பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பணவீக்கக் காலத்திலும் தங்கம் தொடர்ந்து சிறப்பான செயல்திறனை வழங்கியிருக்கிறது. மக்கள் தான் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள் என்று பார்த்தால்.. தற்போது உலக வங்கிகளும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இது ஒரு புறம் நன்மையாக பார்க்கப்பட்டாலும் உலக வங்கிகளே தொடர்ந்து தங்கத்தை வாங்கத் தொடங்கி விட்டால் கண்டிப்பாக இனிவரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத்தான் பிரபல நிதி நிறுவனங்களான ஜேபி மார்கன் போன்ற நிறுவனங்களும் கணித்துள்ளன.

சில நிதி நிபுணர்களும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.30,000-த்தை எட்டிவிடும் என்று கணித்துள்ளனர். இன்று விற்பனை செய்யப்படும் விலையே ஒரு சிலருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அப்படி இருக்கையில் இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரித்தால் முன்பே வாங்கி இருக்கலாம் என்று நம்மை யோசிக்க வைக்கும் வாய்ப்பும் உள்ளது. நிபுணர்கள் மற்றும் பிரபல நிதி நிறுவனங்களின் கணிப்பு எந்த அளவுக்கு உண்மை என்பதும் இனிவரும் நாட்களில் தெரியவரும்.

Share This Article

Story first published: Sunday, June 28, 2026, 7:45 [IST]

Other articles published on Jun 28, 2026

Read More

Previous Post

ஈரான் என்ற நாடே இருக்காது.. 2வது நாளாக தாக்குதலை தொடங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் வார்னிங் | Iran will no longer exist, US President Donald Trump issus fresh warning

Next Post

Climate Change | வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு… தீவிர காலநிலை மாற்றத்தால் உருகும் ஐரோப்பிய கண்டம்! | உலகம் போட்டோகேலரி

Next Post
Climate Change | வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு… தீவிர காலநிலை மாற்றத்தால் உருகும் ஐரோப்பிய கண்டம்! | உலகம் போட்டோகேலரி

Climate Change | வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு... தீவிர காலநிலை மாற்றத்தால் உருகும் ஐரோப்பிய கண்டம்! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin