இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியைக் காண ஏராளமானோர் காத்திருப்பதால் டிக்கெட்டின் தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “ஒவ்வொரு டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு போட்டி. இதற்கான டிக்கெட் தேவை என்பது அதிக அளவில் இருக்கிறது. 34,000 பேர் அமரக்கூடிய மைதானத்தை கட்டி வருகிறோம். டிக்கெட் இருப்பை விட 200 மடங்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வருகைப் புரிவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.