இரண்டாம் பாதியில் அதாவது, 65-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் நட்சத்திர முன்கள வீரர் லுயி ஆர்டைம் (Luis Artime) முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. கோல் வாங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்தது. 71-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் நடுகள வீரரான பிர்ரி (Pirri) ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 79-வது நிமிடத்தில் மீண்டும் அர்ஜென்டினாவின் லுயிஸ் ஆரிடைம் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். அர்ஜென்டினா வெற்றி பெற்றது.


