ஆதரவாற்றவர்கள் இல்லத்தில் வாழ்ந்து, 16 வயதில் திருமணம் செய்து, 5 ரூபாய்க்கு கூலி வேலை செய்து, தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்திருக்கும் சாதனைப் பெண்ணான ஜோதி ரெட்டியின் வளர்ச்சியை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தனது 16 வயதில், திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட ஜோதி, தனது 18 வயதில் இரண்டு மகள்களின் தாயானார். வளர்ந்து வரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர் விவசாய நிலங்களில் வெறும் 5 ரூபாயை தினக் கூலியாக பெற்று வேலை செய்தார். தற்போது இவர் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். சில வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதோடு அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர உதவியாக இருக்கும். அந்த வகையில், ஒரு மாபெருமங சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வருவதற்கான அனைத்து முரண்பாடுகளையும் உடைத்த ஜோதி ரெட்டியின் பயணம் அனைவருக்கும் நிச்சயம் உத்வேகத்தை அளிக்கும்.
இதையும் படிக்க:
ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்
தினசரி கூலியை நம்பி பிழைப்பு நடத்தும் தொழிலாளியின் மகளான ஜோதியை, அவரது தந்தை 8 வயதில் ஆதரவற்றவர்கள் இல்லத்திற்கு அனுப்பியது, ஜோதியின் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் ஒரு கடினமான திருப்பத்தை கொடுத்தது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்த ஜோதி அனாதை இல்லத்தில் வளர்ந்து கொண்டே அரசுப் பள்ளியில் படித்தார்.
பின்னர் அடுத்த திருப்பமாக தனது 16 வயதில் திருமணம் செய்துகொள்ள ஜோதி நிர்பந்திக்கப்பட்டார். மேலும் தனது 18 வயதில், அவர் இரண்டு மகள்களுக்கு தாயானார். வளர்ந்து வரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், விவசாய நிலத்தில் பணிபுரிந்தார், அதற்காக வெறும் 5 ரூபாயை தினசரி ஊதியமாக பெற்றார்.
பின்னர், மத்திய அரசின் திட்டம் அவரை ஆசிரியர் பதவியில் தொடர அனுமதித்ததும் அவரது வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், போதுமான வருமானம் இல்லை, எனவே அவர் இரவு நேரங்களில் தையல் தொழிலை மேற்கொண்டார்.
இதையும் படிக்க:
தினமும் வேலைக்கே போகாமல் மாதந்தோறும் பணம் சம்பாதிக்கலாம்.. ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும்!
1994 ஆம் ஆண்டில், ஜோதி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து 1997 இல் காகதியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இந்தத் தகுதிகள் அவரை அதிகமாகச் சம்பாதிக்க அனுமதித்தாலும், மாதம் அவருடைய சம்பளம் ரூ.398 லேயே இருந்தது.
பின்னர், அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஒரு உறவினர், வெளிநாட்டில் உள்ள வாய்ப்புகள் பற்றிக் கூறியது, ஜோதியின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்தது.
ஜோதி தனது கம்ப்யூட்டர் படிப்புகளை முடித்து, தனது தகுதியை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவில் பணிபுரியச் சென்றார். ஆரம்பத்தில் தனது படிப்பிற்கு சம்பந்தமில்லாத, பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்தல், குழந்தை காப்பகம் மற்றும் பல வேலைகளை மேற்கொண்டார். அவரது முதல் நிலை ஆட்சேர்ப்பில் இருந்தது.
2001 இல், தனது $40,000 சேமிப்பை வைத்து, கீ சாஃப்ட்வேர் சொலியூசன் (Key Software Solutions) என்கிற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். ஒரு சாதாரண தொடக்கமாக ஆரம்பித்த இந்த நிறுவனம் தற்போது $15 மில்லியன் சம்பாதித்து இறுதியில் 2017 இல் ஒரு பில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
