• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

16 வயதிலேயே CA முடித்த இந்திய மாணவர்… கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்..!! | 16-Year-Old Lakshmanan Meyyappan Becomes World’s Youngest Chartered Accountant: Guinness World Record

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
16 வயதிலேயே CA முடித்த இந்திய மாணவர்… கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்..!! | 16-Year-Old Lakshmanan Meyyappan Becomes World’s Youngest Chartered Accountant: Guinness World Record
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


16 வயதிலேயே CA முடித்த இந்திய மாணவர்… கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்..!!

16 வயதில் நாமெல்லாம் 10ஆம் வகுப்பு தான் படித்திருப்போம், எதிர்காலத்தில் என்ன ஆக போகிறோம் என்ற ஐடியா கூட பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. ஆனால் இங்கே 16 வயதான ஒரு மாணவன் சிஏ படிப்பை முடித்து உலகின் இளம் வயது சிஏ என்ற சாதனையை படைத்துள்ளார்.

துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயதான லட்சுமணன் மெய்யப்பன், உலகின் மிக இளம் வயது சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) என்ற பெருமையை பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில்,10ஆம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த அவர் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்து அக்கவுண்ட்டிங் துறையில் ஆர்வம் காட்டியுள்ளார்.

16 வயதிலேயே CA முடித்த இந்திய மாணவர்... கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்..!!

லட்சுமணனின் தாய் ஒரு தகுதியுள்ள சார்ட்டெர்ட் அக்கவுண்ட்டண்ட் நிபுணர், அவர் மகனுக்கு அக்கவுண்ட்ஸ் -இன் அடிப்படையை கற்று தந்தாராம். அதன் பிறகு, அவர் ஒரு தொழில்முறை பயிற்சி அகாடெமியில் சேர்ந்து, மிக குறுகிய காலத்தில் ACCA படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ACCA படிப்பை முடித்த கையோடு, நிதித்துறையில் மிக உயரிய தகுதியாக கருதப்படும் CFA (Chartered Financial Analyst) பட்டத்தையும் முடித்துள்ளார். இதன் மூலம் இளம் வயது சிஏ என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் தற்போது துபாயில் உள்ள செஞ்சுரி பைனான்சியல் நிறுவனத்தில் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். முதலீட்டு ஆராய்ச்சி குறித்து ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இந்த சாதனை குறித்து பேசிய லட்சுமணன், இந்த மைல்கல் மிக முக்கியமானது. நான் எப்போதும் படிப்புகளை ஒரு பந்தயமாக பார்த்ததில்லை. நிஜ உலகில் நிதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வதும், காலத்திற்கு ஏற்ற திறன்களை வளர்த்துக்கொள்வதுமே என் நோக்கமாக இருந்தது என கூறியுள்ளார். கற்கும் ஆர்வம் இருக்கும்போது, வேகம் தானாகவே வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த சில காலத்திலேயே தனது அக்கவுண்டண்ட் பயணத்தை தொடங்கி, ஓராண்டுக்குள் சிஏ-ஆக உள்ளார். நிதித்துறை படிப்புகள் மட்டுமின்றி, ஓய்வு நேரத்தில் கைக்கடிகாரங்களை வடிவமைத்து உருவாக்கும் கலையிலும் இவர் ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது 21 வயதாகும் லட்சுமணன், கின்னஸ் உலக சாதனை, இளம் வயது சிஏ மற்றும் தனித்துவமான பொழுதுபோக்கு என பல சாதனைகளுடன் மாணவர்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளார்.

Share This Article

English summary

16-Year-Old Lakshmanan Meyyappan Becomes World’s Youngest Chartered Accountant: Guinness World Record

16 வயதிலேயே CA முடித்த இந்திய மாணவர்… கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்..!! / Lakshmanan Meyyappan, an Indian finance professional, has been recognised by Guinness World Records as the world’s youngest male Chartered Accountant.

Story first published: Monday, August 17, 2026, 14:54 [IST]

Other articles published on Aug 17, 2026

Read More

Previous Post

தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனை – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பிரபல இந்தி நடிகை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி… | Makkal Osai

Next Post
பிரபல இந்தி நடிகை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி… | Makkal Osai

பிரபல இந்தி நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin