• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

150 தோட்டாக்களுடன் ஏகே-47.. திடீரென அலுவலகத்தில் புகுந்து தாறுமாறாக சுட்ட CISF வீரர்.. 4 பேர் பலி | Jammu Kashmir shooting: CISF Soldier Opens Fire on Colleagues 4 Killed, What really happened

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
150 தோட்டாக்களுடன் ஏகே-47.. திடீரென அலுவலகத்தில் புகுந்து தாறுமாறாக சுட்ட CISF வீரர்.. 4 பேர் பலி | Jammu Kashmir shooting: CISF Soldier Opens Fire on Colleagues 4 Killed, What really happened
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Wednesday, September 30, 2026, 7:06 [IST]

கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் சக வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தால் காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கிமயானது தான் CISF எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை. விண்வெளி மையங்கள், அணுமின் நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் போன்ற நாட்டின் மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே இதன் முக்கிய பணி.

kashmir shooting

இதுதவிர நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் விஐபிகளுக்கான பாதுகாப்புப் பணிகளையும் இப்படையே மேற்கொள்கிறது. இந்த த்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் தான் இப்போது மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது பசோலி பகுதியில் உள்ள மாஷ்கா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவா நீர்மின் திட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் சிலர் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாதாரண வாக்குவாதத்தில் ஆரம்பித்த இது துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளது. நேற்று மாலை சுமார் 6.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 4 பேரும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள என்ஹெச்பிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் 4 பேருமே சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, துணை ஆய்வாளர் லட்சுமண் சிங், தலைமைக் காவலர் ரஃபிக் அகமது மற்றும் தலைமைக் காவலர் சந்தீப் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சிஐஎஸ்எஃப் தலைமைக் காவலர் அவதேஷ் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.. வாக்குவாதத்துக்குப் பிறகு அலுவலகத்துக்குள் நுழைந்த அவர், தனக்கு வழங்கப்பட்ட ஏகே-47 துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது அவரிடம் 150 தோட்டாக்கள் இருந்ததாக சிஐஎஸ்எஃப் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அந்த ஆயுதமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அவதேஷ் குமார் சிங் கைது செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சக வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச்சூட்டாக மாறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary

CISF head constable allegedly opened fire at his colleagues following an argument(காஷ்மீரில் துப்பாக்கி சூடு): Jammu Kashmir shooting latest news in tamil.

Read More

Previous Post

பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள்: அதிதீவிரமாக வலுப்பெற்ற மூன்று புயல்கள் – Sri Lanka Tamil News

Next Post

அக்டோபர் 1 முதல்.. புது ரூல்ஸ் .. SBI வாடிக்கையாளர்களே! இனி ஏடிஎம் பயன்படுத்த இதுதான் லிமிட்! | SBI New Rules From October 1: Check ATM and BSBD Charges

Next Post
அக்டோபர் 1 முதல்.. புது ரூல்ஸ் .. SBI வாடிக்கையாளர்களே! இனி ஏடிஎம் பயன்படுத்த இதுதான் லிமிட்! | SBI New Rules From October 1: Check ATM and BSBD Charges

அக்டோபர் 1 முதல்.. புது ரூல்ஸ் .. SBI வாடிக்கையாளர்களே! இனி ஏடிஎம் பயன்படுத்த இதுதான் லிமிட்! | SBI New Rules From October 1: Check ATM and BSBD Charges

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin