• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

15 ஆண்டு பயணம், போராட்டம், ஏமாற்றங்கள்… – நடிகர் ரிஷிகாந்த் பகிர்வு…

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
15 ஆண்டு பயணம், போராட்டம், ஏமாற்றங்கள்… – நடிகர் ரிஷிகாந்த் பகிர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் ரிஷிகாந்த் தனக்குக் கிடைத்த அன்பிற்கும் வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்று ‘மொத ராத்திரி’ படத்தில் நாயகனாக வென்ற ரிஷிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ரிஷிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய 15 வருடப் பயணம் அர்த்தம் உள்ளதாக இருந்தது என்று என்னை உணர வைந்த ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும், என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கை கற்று கொடுத்த பாடங்கள், “இன்னும் எவ்வளவு காலம்?” “இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்?” என்று நான் என்னையே கேள்வி கேட்ட தருணங்கள் உண்டு.

ஆனால் இன்று, நீங்கள் என் மீது பொழிந்துகொண்டிருக்கும் அன்பையும் பாசத்தையும் ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நன்றி.. என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்கள் அனைவரிடமிருந்தும் ஏராளமான குறுஞ்செய்திகள், காமெண்ட்கள், வாழ்த்துகள், எடிட்கள், அழைப்புகள், அன்பான வார்த்தைகள் என தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக இரண்டு படங்களின் வெளியீடுகள் மற்றும் புரமோஷன்கள் காரணமாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, நன்றி சொல்ல என்னால் இதுவரை முடியவில்லை. ஆனால், அதற்காக நான் உங்கள் அன்பை உணரவில்லை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நான் ஒவ்வொரு தருணமும் உணர்ந்திருக்கிறேன். எனக்காக நேரம் ஒதுக்கி, என்னுடன் நின்ற ஒவ்வொரு மனிதரையும் நான் மனதார மதிக்கிறேன்.

இனிமேல், உங்கள் ஒவ்வொருவருக்கும் மெல்ல மெல்ல தனிப்பட்ட முறையில் பதிலளிக்கத் நன்றி சொல்ல தொடங்குகிறேன். அதற்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால், நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் பதிலளிப்பேன். ஏனென்றால், இவ்வளவு அன்பை எனக்குக் கொடுத்த உங்களுக்கு தனிப்பட்ட முறையில் முறையாக பதில் அளிக்க வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பு என்னை உண்மையிலேயே நெகிழச் செய்கிறது. ஆனால், அந்த அன்பு என் தலைக்குள் ஏறிவிடக்கூடாது என்று நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். மாறாக, உங்கள் அன்பு என்னை முன்பைவிட அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வலியுறுத்துகிறது. என்மீது அன்யையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நீங்கள் வைக்கத் தொடங்கும்போது அந்த அன்பை மதிப்பது என்னுடைய பொறுப்பாகிறது. அந்தப் பொறுப்பை மிகவும் பணிவுடன் சுமக்க விரும்புகிறேன்.

இனிமேல் நான் பண்ணும் ஒவ்வொரு படத்திலும் இன்னும் கடினமாக உழைப்பேன். இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்வேன். மிக முக்கியமாக, நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் நம்பிக்கையை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். 15 வருடங்களாக அங்கீகாரத்திற்காக போராடிய எனக்கு இன்று நீங்கள் கொடுத்து வரும் இந்த அன்பு மிகவும் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கிறது. அதிலும் என்னை மிகவும் ஆழமாகத் தொட்ட ஒரு விஷயம். உங்கள் குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

இன்று எனக்கு ஒரு மிகப்பெரிய குடும்பம் கிடைத்துவிட்டது என்ற உணர்வு வருகிறது. என்னுடைய பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. என் உண்மையான பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று உணர்கிறேன். இன்னும் கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பிற்கு தகுதியானவனாக மாற தொடர்ந்து முயற்சி செய்வேன்.

என்னை நம்பியதற்கு நன்றி. என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக… என்னுடன் துணை நின்றதற்கு நன்றி. ஒன்றாக வளர்வோம்… ஒன்றாக வெல்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

The post 15 ஆண்டு பயணம், போராட்டம், ஏமாற்றங்கள்… – நடிகர் ரிஷிகாந்த் பகிர்வு… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

விமானி பயிற்சியே முடிக்காத நபர்? ஃப்ளைதுபாய் விமானத்தை கவிழ்க்க முயன்ற துணை விமானி பற்றி திடுக்கிடும் தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post

13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Next Post
13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin