Last Updated:
ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்த முயன்ற ஹமாம்-அல்-ஹம்மாமி, ஓமன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் விமானப் பயிற்சியை முடிக்காதவர், ஓமன் ஏர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு விமானப்
ஃப்ளைதுபாய் விமானத்தைக் கடத்த முயன்ற நபர், ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், விமான பயிற்சியை முடிக்காதவர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதியில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த விமானத்தில், துணை விமானியாக செயல்பட்டு, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு விபத்தை ஏற்படுத்த முயன்றவரின் பெயர் ஹமாம்-அல்-ஹம்மாமி என்பது தெரிய வந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்டகாலமாக வசித்து வந்த ஹமாம்-அல்-ஹம்மாமி, ஓமனைச் சேர்ந்த தந்தைக்கும் – சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் விமான மேலாண்மையியலில் தொலைதூர கல்வியை முடித்த அவர், விமானி பயிற்சியை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஓமன் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அவருடைய செயல்பாடுகளால் பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் தேசிய விமான நிறுவனத்தில் வேறு பணி வழங்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவரை பணியமர்த்துவதற்கு முன்பு குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவரா என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், தீவிரவாத தொடர்புடையவரா என்பது குறித்து ஆராயவில்லை என்றும் வளைகுடா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்த முயன்ற துணை விமானியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, விமானப் பயண நாள் வரை செயலில் இருந்து, பின்னர் நீக்கப்பட்டது கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.


