ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17.09.2026) பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
பெறுமதி 100 கோடி ரூபாய்
அந்தச் சுற்றிவளைப்பின்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் 211 கிலோ 818 கிராமாக இருந்துள்ளது.

பின்னர் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கையின்படி, அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக இது பதிவாகியிருந்ததுடன், அதன் பெறுமதி 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது.
[RFPCXGQ ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

