Last Updated:
பங்குச் சந்தை மூலம் 30,213 கோடி ரூபாய் திரட்ட ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பங்குச்சந்தையில் களம் இறங்கிய வெறும் 100 நிமிடங்களில் JIO PLATFORMS-ன் அனைத்து பங்குகளும் புக் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் தற்போது JioFiber, JioAirFiber ஆகிய அதிவேக இணையசேவைகளை வழங்கி வருகிறது. மேலும், வெப் தொடர்கள், விளையாட்டுகளை பார்க்கும் ஜியோ ஓடிடி தளம், Jio Mart உள்ளிட்ட சேவைகளையும் அளித்து வருகிறது.
இந்த நிலையில், பங்குச் சந்தை மூலம் 30,213 கோடி ரூபாய் திரட்ட ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ஆயிரத்து 65 ரூபாயிலிருந்து ஆயிரத்து 119 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட்டாகவும், அதிகபட்சமாக 14 லாட்டாகவும் முதலீடு செய்யலாம். ஒரு லாட் என்பது 12 பங்குகள் ஆகும்.
இந்த நிலையில், பங்குச்சந்தையில் களம் இறங்கிய வெறும் 100 நிமிடங்களில் JIO PLATFORMS-ன் அனைத்து பங்குகளும் புக் செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. வரும் 23 ஆம் தேதி வரை முதலீட்டாளர்கள் புக் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி அன்று பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்டோபர் 28 அன்று பங்குச் சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டு வர்த்தகத்திற்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


