Last Updated:
2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி சம்பளம் பெற்றதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய ஆட்டக்காரராக இருக்கும் ஒருவரின் சகோதரியும் அவரது கணவரும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளனர்.
இது குறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது சமி. இவர் இந்திய அணிக்காக 108 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 206 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேபோன்று 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 25 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வரும் முகமது சமி அணியின் திறமையான பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டமாகும்.
இங்கு சமியின் சகோதரி சபீனா என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்துள்ளார். இவரும் இவரது கணவரும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். இருவரும் 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி சம்பளம் பெற்றதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போது அவர்கள் பணியாற்றுகிறார்களா என்பதை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருக்கும் சாமியின் சகோதரி நூறு நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய விபரங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
March 26, 2025 5:39 PM IST


