Last Updated:
செயல்பாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த ஆன்லைன் பார்மசி அறிமுகமானது, 12 மாத சோதனை கட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்த வெறும் 10 நிமிடங்களில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கான ஆன்லைன் பார்மசியை செப்டோ நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. ‘செப்டோ பார்மசி’ என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த ஆன்லைன் பார்மசி என்பது குறிப்பிட்டு சில மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குயிக் காமர்ஸ் பிளாட்ஃபார்மான Zepto கடந்த வியாழக்கிழமை அன்று குறிப்பிட்ட சில மெட்ரோபாலிட்டன் பகுதிகளில் 10 நிமிடங்களில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கான Zepto பார்மசி என்ற ஆன்லைன் பார்மசியை அறிமுகம் செய்துள்ளது. மும்பை, பெங்களூரு, டெல்லி NCR மற்றும் ஹைதராபாத் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் தற்போதைக்கு இந்த செப்டோ பார்மசி என்ற ஆன்லைன் பார்மசி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக Zepto ஃபவுண்டர் மற்றும் CEO ஆன ஆதித் பலிச்சா அவர்கள் ஒரு LinkedIn பதிவு மூலமாக கூறியுள்ளார். மேலும், செயல்பாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த ஆன்லைன் பார்மசி அறிமுகமானது, 12 மாத சோதனை கட்டமாக இருக்கும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
“இன்று நாங்கள் ‘Zepto பார்மசி’ என்ற 10 நிமிடங்களில் மருந்துகளை டெலிவரி செய்யும் ஆன்லைன் பார்மசியை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த 10 மாதங்களாக எங்களுடைய குழுவானது வாடிக்கையாளர்களின் அனுபவம், விநியோக சங்கிலி மற்றும் இணக்கத்தை ஒரு குறுகிய அளவில் மேம்படுத்துவதற்கான வேலைகளில் அயராது ஈடுபட்டிருந்தனர். அதனை இங்கிருந்து நிலையாக வளர்ச்சி அடைய செய்ய நாங்கள் விரும்புகிறோம். இந்த சிக்கலை கருத்தில் கொண்டு செயல்பாட்டு தரங்களை உயர்த்துவது மற்றும் அதே சமயத்தில் மிக விரைவாக விரிவாக்கம் செய்யாமல் இருப்பதே எங்களுடைய நோக்கம்”, என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடிப்படையில் 10 நிமிட மளிகை சாமான் டெலிவரி மாடலையும் தாண்டி Zepto உடைய இந்த விரிவாக்கமானது Tata 1mg, PharmEasy மற்றும் Apollo 24/7 போன்ற மருந்து டெலிவரி சேவைகளை வழங்கி வரும் விரைவு வர்த்தக நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த சேவை சிறப்பாக அமல்படுத்தப்பட்டால் முக்கியமான மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதன் மூலமாக நிச்சயமாக இது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவும் என்ற ஒரு குறிப்பையும் பலிச்சா அவர்கள் கூறி உள்ளார். எனவே, இனி அவசர தேவைக்காக மருந்துகள் வாங்கும் போது எந்த ஒரு பதட்டமுமோ, அசவுகரியமுமோ இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
August 09, 2025 9:48 AM IST
10 நிமிடங்களில் ஆன்லைன் மருந்து டெலிவரி செய்ய Zepto புதிய திட்டம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?


