Last Updated:
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆகக் குறைக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்திருந்தார். இதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பை 18 ஆகவே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த வயது வரம்பைக் குறைப்பது ஆபத்தானது என்றும், இது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் நோக்கத்தைச் சிதைக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆகக் குறைக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்திருந்தார். இதனை ஒரு வழக்கில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞராக அவர் முன்வைத்தார். இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி மூலம் எழுத்துப்பூர்வமான பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதிலில், “பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பை நீர்த்துப்போகச் செய்வது, அல்லது ‘இளம் பருவ காதல்’ என்ற பெயரில் விதிவிலக்குகளை அனுமதிப்பது, சட்டப்படி நியாயமற்றது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
August 09, 2025 9:41 AM IST


