• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹோம் லோனை முழுசா கட்டி முடிச்சிட்டீங்களா? அப்போ இந்த டாக்குமெண்ட்ஸ்-ஐ வாங்க மறந்துறாதீங்க! | Last Home Loan EMI Paid? Get These Documents Before Closing Your Loan

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹோம் லோனை முழுசா கட்டி முடிச்சிட்டீங்களா? அப்போ இந்த டாக்குமெண்ட்ஸ்-ஐ வாங்க மறந்துறாதீங்க! | Last Home Loan EMI Paid? Get These Documents Before Closing Your Loan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோம் லோனை முழுசா கட்டி முடிச்சிட்டீங்களா? அப்போ இந்த டாக்குமெண்ட்ஸ்-ஐ வாங்க மறந்துறாதீங்க!

அவசரப்பட்டு ஹோம் லோன் வாங்கிவிட்டு ஒரு நாள் அதை முழுமையாக அடைக்கும் போது ஒரு விதமான திருப்தி வரும். அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அது புரியும். ஏனெனில் பல ஆண்டுகள் தொடர்ந்து சிரமப்பட்டு ஈஇஎம்ஐ செலுத்தி வருவார்கள். அதை முடித்துவிட்டு தங்களுடைய பத்திரத்தை கையில் வாங்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நீங்களும் சமீபத்தில் உங்கள் வீட்டுக் கடனை முடித்திருந்தால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.

நீங்கள் பிணையமாக வைத்த பத்திரத்தை வங்கியோ அல்லது நிதி நிறுவனத்தில் இருந்தோ வாங்கிவிட்டால் மட்டும் அந்த சொத்து உங்களுக்கு உரிமையாகிவிடாது. சொத்தின் மீதான முழு அதிகாரத்தையும் சட்டபூர்வமாக பெறுவதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும். அது என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஹோம் லோனை முழுசா கட்டி முடிச்சிட்டீங்களா? அப்போ இந்த டாக்குமெண்ட்ஸ்-ஐ வாங்க மறந்துறாதீங்க!

ஒரிஜினல் பத்திரத்தை வாங்க வேண்டும்: வீட்டுக் கடன் பெறுவதற்கு வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் உங்களுடைய ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் வழங்கி இருப்பீர்கள். இதை முதலில் வாங்க வேண்டும். உதாரணமாக சொத்து பத்திரம், அலாட்மெண்ட் லெட்டர், ஹவுசிங் சொசைட்டியின் என்ஓசி, கட்டிட வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இதில் அடங்கும். அதேபோல நீங்கள் கடனை முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெரும் ஆவணங்கள் அனைத்தும் சேதமடையாமல் இருக்க வேண்டும்.

அதேபோல எல்லா பேஜும் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி இதற்கென தனி விதிமுறையை வகுத்துள்ளது. கடன் வழங்குனர் நீங்கள் கடனை முடித்த 30 நாட்களுக்குள் உங்களுடைய ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால்.. தாமதமாகும் ஒவ்வொரு நாளும் அந்த வங்கி உங்களுக்கு ரூ.5000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஹோம் லோன் க்ளோசர் லெட்டர்: இதை நீங்கள் கடன் பெற்ற வங்கிகள் உங்களுக்கு வழங்கும். அதாவது ஒரு வாடிக்கையாளர் தங்களுடைய வீட்டுக் கடனை முழுமையாக செலுத்துவிட்டார் என்பதற்காக வங்கிகளிடம் இருந்து பெறப்படும் அதிகாரப்பூர்வ கடிதம் தான் இது.

நொ டியூஸ் சர்டிபிகேட் (No Dues Certificate – NDC): வங்கிகளால் வழங்கப்படும் சான்றிதழ்களுள் ஒன்றுதான் இந்த என்டிசி சான்றிதழ். அதாவது நீங்கள் கடன் பெற்ற வங்கிக்கும் உங்கள் சொத்துக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ ஆவணம். NDC சான்றிதழில் சொத்து யார் பெயரில் இருக்கிறது?, எந்த முகவரியில் இருக்கிறது?, கடன் விவரங்கள் எவ்வளவு?, கடன் வாங்கப்பட்ட நாள், கடன் முடிக்கப்பட்ட நாள் இப்படி பல விவரங்கள் இருக்கும்.

வில்லங்க சான்றிதழ் பெறுதல்: உங்கள் கடனை முடித்த அடுத்த கனமே ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீசுக்கு சென்று புதிதாக வில்லங்கச் சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் யாரும் உங்கள் சொத்தின் மீது உரிமை கொண்டாடாமல் இருப்பார்கள்.

சிபில் ஸ்கோரை சரி பாருங்கள்: கடன் முழுமையாக அடைக்கப்பட்டதும் உங்கள் கிரெடிட் கார்டு ரிப்போர்ட் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். ரிப்போர்ட்டில் “Closed” என்று இருக்கிறதா? அல்லது “Settled” என்று இருக்கிறதா? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கடன் முழுமையாக முடிந்த பின்னர் கிலோஸ்டு என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Share This Article

Story first published: Friday, August 28, 2026, 17:12 [IST]

Other articles published on Aug 28, 2026

Read More

Previous Post

3.15க்கு ரூ.1 லட்சம் போட்டிருந்தால் 3.20 மணிக்கு ரூ.44 லட்சம் லாபம்! வாயை பிளக்கும் முதலீட்டாளர்கள் | Sensex Volatility: How Rs 1 Lakh in Put Options Could Have Made Rs 44 Lakh in just five Minutes

Next Post

நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன தீயணைப்பு படை அதிகாரியைத் தேடி மனைவி காத்மண்டு பயணம்! | Makkal Osai

Next Post
நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன தீயணைப்பு படை அதிகாரியைத் தேடி மனைவி காத்மண்டு பயணம்! | Makkal Osai

நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன தீயணைப்பு படை அதிகாரியைத் தேடி மனைவி காத்மண்டு பயணம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin