• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி? Ind vs Pak போட்டியில் கவனம் ஈர்த்த பெண்… யார் இவர்?

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி? Ind vs Pak போட்டியில் கவனம் ஈர்த்த பெண்… யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 1:28 PM IST

ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவை காதலிப்பதாக செய்திகள். இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் ஜாஸ்மின் மைதானத்தில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

News18News18
News18

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்திக் பாண்டியா. செர்பியா நாட்டைச் சேர்ந்தவரும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே 2020ல் காதல் மலர்ந்து. லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்த நிலையில் நடாஷா கருவுற்றார். பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். 2023ம் ஆண்டு காதலர் தினத்தன்று, மகனுடன் சேர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக மணமுடித்தனர்.

மிகவும் அன்பு நிறைந்த தம்பதியாக இருவரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில், திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஐபிஎல் போட்டிகளை காண நடாஷா வராததும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த பாண்டியாவை நீக்கியதும், நடாஷா பிறந்தநாளுக்கு எந்த பதிவையும் பாண்டியா போடாததும் விவாகரத்து குறித்த வதந்திக்கு தொடக்க புள்ளியாக அமைந்தன. தொடர்ந்து 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹர்திக் பாண்டியா – நடாசா தம்பதி கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.

மனைவியை பிரிந்த பின், ஹர்திக் பாண்டியா மீண்டும் காதல் வயப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அவர் தற்போது பிரிட்டிஷ் டிவி நட்சத்திரம் ஜாஸ்மின் வாலியாவை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. ஜாஸ்மின் வாலியா, இசை கலைஞரும் கூட. இந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் பாடல் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தான் ஜாஸ்மின் வாலியாவை ஹர்திக் பாண்டியா காதலிப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தான் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஜாஸ்மின் வாலியாவும் மைதானத்துக்கு வந்திருந்தார். விஐபி இருக்கையில் அமர்ந்து மேட்சை பார்த்த ஜாஸ்மின், டிவி கேமராவை தன் பக்கம் திருப்பவும் ப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடந்த ஆண்டு முதல், ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா டேட்டிங் செய்வதாக வதந்தி பரவிவரும் நிலையில், ஹர்திக் விளையாடிய போட்டியையும் அவர் நேரில் கண்டிருப்பது யூகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 24, 2025 1:28 PM IST

Read More

Previous Post

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை!

Next Post

Undocumented Immigrants: `அடுத்தடுத்து…’ – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Next Post
Undocumented Immigrants: `அடுத்தடுத்து…’ – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Undocumented Immigrants: `அடுத்தடுத்து...' - இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin