ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள இந்திய எல்லைக் கோடு சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.24) பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் அம்மாநில காவல் துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேடுதல் நடவடிக்கையானது பார்மார்னார், கிகெர் மோர், ஜப்தான் கலி, ஹர்னி, கஸ்பலாரி மற்றும் பஃபிலாஸ் வனப்பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க: ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம்! இருந்தும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது ஏன்?

