• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்பதற்கு முன்பாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடுமையாக எச்சரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயத்தை தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.

பிணைக் கைதிகள்

எனினும், அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை.

நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25ஆம் திகதிக்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Trump S Stern Warning To Hamas


அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனித குலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.




இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள்.”என  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்(2023) அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Trump S Stern Warning To Hamas


இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது.


இதில், இதுவரை 43,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் அவர்களின் நிலை குறித்து தகவல்களும் வெளியாகவில்லை.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்க 1990களிலிருந்து ஜப்பானிய முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Next Post

தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்

Next Post
தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்

தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin